02 February 2011

மதுரை ஸகாத் விவாதம் - ஒரு பார்வை


(மதுரை ஸகாத் விவாதம் தொடர்பான இந்த விமர்சனக் கட்டுரை 5.8.2009 அன்று ஆன்லைன் பிஜே யில் வெளியிடப்பட்டதாகும்)

ஆடிய ஆட்டமென்ன? ஓடிய ஓட்டமென்ன?
بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهُ فَإِذَا هُوَ زَاهِقٌ وَلَكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُونَ
 'உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடுதான்.'
(
அல்குர்ஆன் 21:18)
وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
'உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது.'
(
அல்குர்ஆன் 17:81)

மண்டியிட வைத்த தொண்டி விவாதம்


 (தொண்டி விவாதம் தொடர்பான இந்த விமர்சனக் கட்டுரை 3.12.2009 அன்று ஆன்லைன் பிஜே யில் வெளியிடப்பட்டதாகும்)

மண்டியிட வைத்த தொண்டி விவாதம்

கே.எம். அப்துந் நாசிர்கடையநல்லூர்
விவேகத்துடனும்அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன். அல்குர்ஆன் 16:125
'நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!என்று அவர்கள் கூறினர். அல்குர்ஆன் 11:32
சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப் பிரித்துப் பார்ப்பதற்கு விவாதக் களம் காண்பதும் அவசியம் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இரண்டாம் ஜமாஅத்


(இந்த ஆய்வுக் கட்டுரை 23.11.2009 அன்று ஆன்லைன் பிஜே யில் வெளியிடப்பட்டதாகும் )
இரண்டாம் ஜமாஅத்
ஹதீஸ்களில் இல்லாத கருத்தை ஹதீஸ்களில் உள்ளது போல் காட்டுவதில் கைதேர்ந்த (தங்க நகை கட்டுரையில் இதை அம்பலப்படுத்தியுள்ளோம்.) இலங்கை நவ்பர் என்பார் ஒரு ஜமாஅத் முடிந்து மற்றொரு ஜமாஅத் நடத்துவது கூடாது என்றும் வாதிட்டு வருகிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆராய்ச்சிக்குப் பதில் சொல்ல தவ்ஹீத் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஞானம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதால் முன்னுரிமை கொடுத்து இதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்.
இது குறித்து அப்துன்னாஸர் அவர்கள் ஏற்கனவே ஆய்வு செய்து வைத்திருந்தார். அதை தேவையான மாற்றங்களுடன் இங்கே வெளியிடுகிறோம்.

01 February 2011

மார்க்கத்திற்கு எதிரான மவ்­லிதுகள்

மவ்லித் என்பதின் பொருள் என்ன?
மவ்­லிது எனும் அரபிச் சொல்லி­ன் அகராதிப் பொருள் 'பிறந்த நேரம்' அல்லது 'பிறந்த இடம்' என்பதாகும். (ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித், பக்கம்: 8)
ஆனால் பிற்காலத்தில் இஸ்லாத்தில் நபியவர்கள் காட்டாத பித்அத்தான, அனாச்சாரமான காரியங்களை உருவாக்கியவர்கள் நபியவர்களை இறைவனுக்கு நிகராக உயர்த்தி கடவுளாக சித்தரித்து படிக்கும் கேடு கெட்ட கவிதைகளுக்கு மவ்­லிது எனப் பெயரிட்டுவிட்டனர். இதற்கும் உண்மை இஸ்லாத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.