17 January 2011

சுப்ஹ் குனூத் ஓர் ஆய்வு

சுப்ஹ் குனூத் ஓர் ஆய்வு

அப்துந்நாஸிர் எம்..எஸ்.சி.
நாம் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகள் எதுவாக இருந்தாலும் அவை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக இருந்தால் அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப் படாது. இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் பல்வேறு வணக்க வழிபாடுகளில் நபி (ஸல்) அவர்களின் தெளிவான சுன்னத்துகள் புறக்கணிக்கப்பட்டு பல பித்அத்தான காரியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பிறகு அல்லாஹம் மஹ்தினி என்று ஆரம்பிக்கக் கூடிய துஆவை குனூத்தாக ஓதுவதாகும்.

கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்

கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்
கே.எம். அப்துந் நாசிர்
இஸ்லாம் என்பது புற வாழ்க்கையிலும் அக வாழ்க்கையிலும் ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தரக் கூடிய மார்க்கமாகும். 
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை சொர்க்கத்திற்குரிய வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவனுடைய வெளிப்புற வாழ்க்கை மட்டுமல்லாது தன்னுடைய சுற்றத்தினரோடு கலந்து வாழ்கின்ற வாழ்க்கையையும் ஒழுக்கமான வாழ்க்கையாக

15 January 2011

கூட்டுக் குர்பானியைக் குழப்பும் குறைமதியினர்


கூட்டுக் குர்பானியைக் குழப்பும் குறைமதியினர் 
(நன்றி ஆன்லைன் பிஜே)
ஹஜ்ஜுப் பெருநாளில் நிறைவேற்றப்படும் முக்கியமான வணக்கம் குர்பானி கொடுப்பதாகும். இதற்கு அரபி மொழியில் உள்ஹிய்யா என்றும் கூறப்படும்.  உள்ஹிய்யா கொடுப்பதற்குத் தகுதியான பிராணிகள் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவைகளாகும்.

முன்மாதிரி முஸ்லிம் இல்லம்


முன்மாதிரி முஸ்லிம் இல்லம்
ஒரு மனிதன் இவ்வுலகில் பெறுகின்ற மிக முக்கியமான பாக்கியங்களில் ஒன்று வீடாகும். அதிலும் சொந்த வீட்டில் வசிப்பது என்பது மிகப் பெரும் பாக்கியமாகும். ஒரு சொந்த வீட்டைக் கட்டுவதற்காக, கட்டிய மனைவியைப் பிரிந்து பல்லாண்டுகள் பாலைவனத்தில் தன் இளமையைத் தொலைக்கும் மக்கள் கணக்கிலடங்காது. எலி வலையானாலும் தனி வலை வேண்டும், வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப் பார் என்பதெல்லாம் வீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட பழமொழிகளாகும்.